2020-2021 - தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கரூர் மாவட்ட நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா.

 

பாராட்டு விழா...




    2020 - 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன்  நல்லாசிரியர் விருது பெற்ற பெரும் மதிப்பிற்குரிய அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் மனதார வாழ்த்துகின்றோம். தாங்கள் பெற்ற நல்லாசிரியர் விருது தாங்கள் சார்ந்துள்ள பள்ளிகள் மட்டுமன்றி ,கரூர் மாவட்ட ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமே பெருமை கொள்கிறது. தாங்கள் பெற்ற விருதுக்கு நிகரான  விருதையே, தருணத்தையோ யாராலும் வழங்க இயலாது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும். உங்களின் முகம் பார்த்து வாழ்த்துச் சொல்ல எங்கள் மனம் ஏங்கியதன்  விளைவாகவும்,இந்த மகிழ்வு க்குரிய அழகிய தருணத்தை தங்களோடு இணைந்து  எங்களது கரூர் மாவட்டம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கமும் பங்கெடுத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும்.


                  இவ்விழாவிற்க தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சங்கத்தின்  மாநில பொருளாளரும்  கரூர் மாவட்ட செயலாளருமான திரு.மா.மு. சதீஸ் அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்க , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. க.சிவகாமசுந்தரி அவர்கள் முன்னிலை வகிக்க , மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மாண்புமிகு V.செந்தில் பாலாஜி அவர்கள் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். கரூர் முதன்மை கல்வி அலுவலர் திரு. ஆர் .மதன்குமார்  அவர்கள் ,கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. மு.பராசக்தி அவர்கள் மற்றும் குளித்தலை  மாவட்ட கல்வி அலுவலர். திரு.ஆ.பாலசுப்பிரமணி அவர்கள் இவ்விழாவில்  வாழ்த்துரை வழங்கினார்கள்.நிறைவாக கரூர் மாவட்ட தலைவர் திரு.சீ.கு.மகாமுனி. அவர்கள் நன்றி கூறினார். இவ்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.









Post a Comment

Previous Post Next Post