பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி யை தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்/இயக்குநர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு..

இன்று 08.07.2021 நமது சங்கத்தின் மாநில தலைவர் எஸ். சங்கரப்பெருமாள் அவர்கள், மாநில செயல் தலைவர் எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில இணைச்செயலாளர் திரு எஸ்.ஆரோக்கியதாஸ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ராஜகுரு ஆகியோர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை முற்பகல் 11.50 மணி அளவில் சந்தித்து நமது உடற்கல்வி ஆசிரியர்/ இயக்குநர்களின் அனைத்து கோரிக்கைகளை எடுத்து கூறி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெயர் மாற்றம் அரசாணை எண்27754/2009, உடற்கல்வி இயக்குநர் நிலை -1, மற்றும் இயக்குநர் நிலை-2 நியமனம் சார்ந்த கோரிக்கைகள். ஊக்க ஊதிய உயர்வு அரசாணை 177 திருத்தம் குறித்தும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள்/இயக்குநர்கள் I,II நியமிக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் தகவல் மற்றும் உடற்கல்வி துறை சார்ந்த தகவல்களுக்கு  நமது  குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் Telegram link- Telegram link Website link- Website Twitterlink- Twitter WhatsApp 1 link- WhatsApp 1 WhatsApp 2 link- WhatsApp 2

Post a Comment

Previous Post Next Post