தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், 11-சிவராமன் தெரு, சென்னை 5
07.10.2020 அன்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.எஸ். சங்கரப்பெருமாள் அவர்களும் மாநில பொதுச்செயலாளர் திரு.R.ரத்தினகுமார் அவர்களும், மாநில பொருளாளர் திரு. மா.மு. சதீஷ் அவர்களும் மற்றும் மாநில செயல் தலைவர் எஸ். செல்வகுமார் அவர்களும் நமது நமது சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் திரு. முனைவர் ச. கண்ணப்பன் அவர்களை சந்தித்து உடற்கல்வி துறையின் கோரிக்கைகள் தொடர்பாகவும்,உடற்கல்வி துறையின் தேவைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. அரசாணை 177 திருத்தம் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
2020-2021 கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர்NSS (முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொ)) திரு.M.வாசு அவர்களை சந்தித்து போட்டிகள் எவ்வாறு நடத்துவது.அதன் வழி முறைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாகப் ஆசிரியர் தேர்வு வாரியம்அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நமது சங்கத்தின் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரியாதை நிமித்தமாக தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அவர்களை சங்க பொறுப்பாளர்கள் சந்தித்தார்கள் தொடக்கக்கல்வித்துறையில் உடற்கல்வி துறையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடக்கக் கல்வித்துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
➖➖➖➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு- ஊடகப்பிரிவு
➖➖➖➖➖➖➖➖➖
Super
ReplyDeletePost a Comment