தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொதுக் குழு கூட்டத்தின் தீர்மானங்கள் மற்றும் புகைப்பங்கள்


 

                                                                 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில பொதுக் குழு கூட்டம் 17-08-2024 (சனிக்கிழமை) அன்று காலை 10:00  மணியளவில் கும்பகோணத்தில் உள்ள அன்னை கல்வி குழுமம் நிறுவனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  சங்கத்தின் மாநில தலைவர் திரு. எஸ். சங்கரப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். துணை தலைவர்கள் திரு.N.சுரேஷ் குமார், திரு.B. பஞ்சாபகேசன்  அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தஞ்சாவூர் மாவட்ட தலைவர் திரு. S.V. முரளி அவர்கள் வரவேற்புரையாற்றினார். செயல் தலைவர் திரு.S.செல்வகுமார் அவர்கள் கடந்த ஆண்டு சங்தத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பேசினார். பின்பு மாநில பொருளாளர் திரு.மா.மு. சதீஷ் அவர்கள் சங்கத்தின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.உறுப்பினர்கள் கருத்துக்களின் அடிப்படையில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு A.பாலமுருகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

                                            17-08-2024 (சனிக்கிழமை) கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. மாநிலத் தலைவராக சென்னை திரு.எஸ். சங்கரப்பெருமாள் அவர்களும், மாநில பொதுச் செயலாளராக கரூர் திரு. மா.மு.சதீஷ் அவர்களும், மாநில பொருளாளராக திருவண்ணாமலை திரு. N.சுரேஷ் குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

                   தீர்மானங்கள் 

1. அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.

2.  6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான  ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

3.அனைத்து மேல் நிலைப் பள்ளிகளில் முதுகலை உடற்கல்வி கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்கள் வழங்க வேண்டும்.

4.அரசாணை எண்.177நாள்.13.10.2016.ஐ திருத்தம் செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு   நியமன கல்வித் தகுதிக்கு மேல் பெற்ற உயர்கல்வியினை வரிசைப்படுத்தாமல் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படவேண்டும்.

5. 2008 - 2009 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மான்யக கோரிக்கையில்  உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் ( உடற்கல்வி)   எனவும், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்தை முதுகலை ஆசிரியர் (உடற்கல்வி) எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  ( அரசு  முதன்மை  செயலர்  கடித எண் 27754 / மேநிக 2 / 2009-1.நாள்:22.09.2009) ஆனால் இதுவரையில் அரசாணை வெளியிடப்படவில்லை.தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு பெயர் மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.


6. அரசு உயர்நிலைப் /மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு  வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை -2  பணியிடங்கள் வழங்கி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கிட வேண்டும்.


7. அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில்  உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.


8.2024-2025 ம் கல்வி ஆண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு உடற்கல்வி ஆசிரியர்கள்  மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 க்கான  கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும்.


9.  பகுதி நேர ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.


10.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.


11.  பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பள்ளியின்  மாணவர்களின் தேவை அறிந்து பள்ளிக்கு தேவையான தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.


12. மேல் நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனத்தில் முதுகலை பட்டம் பெற்ற உடற்கல்வி கல்வி ஆசிரியர்களுக்கு 5 % சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.












Video1 link click here 👇👇👇



Video2 link click here 👇👇👇




































































































Post a Comment

Previous Post Next Post