தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினர் அரசாணை: 150 ல் திருத்தம் செய்து நடைமுறைப்படுத்துமாரு கடிதம்...

 






        தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், (பதிவு எண் 69/2008) சிவராமன் தெரு, சென்னை- 5.


  28.05.2025 மாலை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் (பணியாளர் தொகுதி) அழைப்பினை ஏற்று மாநிலத் தலைவர் திரு. எஸ்.சங்கரப் பெருமாள் அவர்கள், மாநில செயல் தலைவர் திரு. எஸ். செல்வகுமார் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு.மா.மு.சதீஸ் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு.N. சுரேஷ்குமார் அவர்கள் நமது சங்கத்தின் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் மாறுதல் கலந்தாய்வு , அரசாணை எண்: 150 திருத்தம் தொடர்பாக நமது சங்கத்தின் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் 700 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் என்பது ஆசிரியர்களுக்கு பணிச்சுமையையும், மனச்சுமையையும் ஏற்படுத்தும் செயல் என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆகவே அரசாணை எண்: 150 ஐ சில திருத்தங்கள் செய்து வெளியிடுமாறு நமது சங்கத்தின் சார்பாக கோரிக்க வைக்கப்பட்டது
         🙏🙏🙏🙏🙏



Post a Comment

Previous Post Next Post