உடற்கல்வி ஆசிரியர்கள்/ இயக்குநர்கள் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் இயக்குநர் -சங்கப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்,
(பதிவு எண்- 69/2008)
21/11சிவராமன் தெரு,
சென்னை- 5.
➖➖➖➖➖➖
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக (03-12-2024) செவ்வாய்க்கிழமை சங்கத்தின் மாநில தலைவர் எஸ். சங்கரப்பெருமாள் அவர்கள், மாநில செயல் தலைவர் திரு. செல்வகுமார் அவர்கள், மாநில இணைச் செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள், சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஆரோக்கியதாஸ் அவர்கள், செயற்குழு உறுப்பினர் திரு. கணபதி அவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் கோரிக்கைகள் குறித்து
 உயர்திரு பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ல் உள்ளவர்களுக்கு இந்த(2024-2025) ஆண்டு  பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை என்று கூறினோம்.

உயர்திரு. பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள்  அரசாணை எண்- 150 மாற்றம் தொடர்பாக இன்னும் குழுவின் முடிவு வரவில்லை . வந்த பின்பு பணிமாறுதல் கலந்தாய்வு  நடக்கும் என்று கூறினார்கள். உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களின் பதவி உயர்வு தொடர்பாக பேசினோம்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். மேலும் துறை சார்ந்த மற்ற கோரிக்கைகள் தொடர்பாக பேசினோம். அவர்கள்  நிதிப் பிரச்சினை அதிகம் இல்லாத கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக கூறினார்கள்.  

அடுத்து உயர்திரு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகள் தொடர்பாக பேசினோம். குறிப்பாக மாநில புதிய விளையாட்டுப் போட்டிகள் ஒரே தேதியில்  மூன்று விளையாட்டுகள் வெவ்வேறு மாவட்டங்களில் நடப்பதால்  ஓர் உடற்கல்வி ஆசிரியர் மட்டும் பணியில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் அனைத்து இடங்களுக்கும் ஒரே நேரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல  முடியாது என்று கூறினோம். தேதி மாற்றம் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். 

 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களின்   கோரிக்கைகள் தொடர்பாக பேசினோம்.நிதிப்பிரச்சனை அதிகம் இல்லாத கோரிக்கைகளை பரிந்துரை செய்வதாக கூறினார். பணிமாறுதல் கலந்தாய்வு அரசாணை-150  மாற்றம் வந்த பின்பு நடத்துவதாக கூறினார்.

அடுத்து இணை இயக்குநர் (மேல் நிலைக் கல்வி) அவர்களை சந்தித்து பதவி உயர்வு  தொடர்பாக பேசினோம்.அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு நடக்கும் போது உடற்கல்வி இயக்குநர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று கூறினார்.
 
 நம்முடைய கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அதில் அரசாணை 150 மாற்றம் தொடர்பாக  ஏற்கனவே நாம்  கொடுத்த கோரிக்கை கடிதத்தின்  அடிப்படையில் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இயக்குநர் அவர்கள் கூறினார்கள்.அடுத்து மாநில விளையாட்டுப் போட்டிகள் தேதியினை மாற்றுவதாக கூறினார்கள்.அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் . வழங்கப்படும்  என்று கூறினார்கள்.

பின்பு பெயர் மாற்றம் செய்வது நிதிப் பிரச்சினை கிடையாது என்று கூறினோம். அடுத்து ஊக்க ஊதியம் அரசாணை -177 ஐ மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பேசினோம் இயக்குநர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான பட்டதாரி ஆசிரியர் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தோம். அனைத்து மேல் நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் வழங்கி உடற்கல்வி ஆசிரியர்களுக்கும்  உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ல் உள்ளவர்களுக்கும் பணி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை கொடுத்தோம். அனைத்து கோரிக்கைகளையும் படித்து பார்த்தார்கள்.சில கோரிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தோம். கவனமுடன் இயக்குநர் அவர்கள் நமது கருத்துக்களை கேட்டுக்கொண்டார் உடற்கல்வித்துறைக்கு கூடிய விரைவில் மாற்றம் தரும் தகவல் வெளிவரும் என கூறியுள்ளார்.

➖➖➖➖➖➖

-அன்புடன்-

S.சங்கரப் பெருமாள்,
மாநில தலைவர்.

மா.மு.சதீஸ்,
மாநில பொதுச் செயலாளர்,

N.சுரேஷ்குமார்
 மாநில பொருளாளர்,

S. செல்வகுமார்,
மாநில செயல் தலைவர்.

Post a Comment

Previous Post Next Post