தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்,
(பதிவு எண் 69/2008.) 21/11சிவராமன் தெரு, சென்னை- 5
பள்ளிக்கல்வி துறையின் சார்பாக நடைபெறும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்/ மாணவியர்களுக்கு நடைபெறும் 40- வது பாரதியார் தின குழு (BDG) விளையாட்டுப் போட்டிகள் தொட்டியம் , கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று (08.12.2024 ) நடைபெறும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. எஸ். சங்கரப் பெருமாள் அவர்கள் ,மாநில பொதுச் செயலாளர் திரு. மா.மு. சதீஷ் அவர்கள், திருச்சி மாவட்ட தலைவர் திரு. புகழேந்தி, மாவட்ட செயலாளர் திரு.ரமேஷ் கரூர் மாவட்ட தலைவர் திரு. மகாமுனி மற்றும் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு. ரத்தினம் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்று மாணவர்கள், நடுவர் பெருமக்கள், மற்றும் அணி மேலாளர்களை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
நமது சங்க நிர்வாகிகளை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த கொங்கு நாடு கல்லூரியின் தாளாளர் அவர்களிடம் நமது சங்கத்தின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற மைதானம் வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி நிர்வாகிகளுக்கு நமது நன்றிகளை தெரிவித்தோம்.
பாரதியார் தின போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் திருச்சி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.
➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு -மாநில ஊடகப்பிரிவு.
➖➖➖➖➖➖
Post a Comment