*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்* *(பதிவு எண் 69/2008)*
*இன்று 18.05.2023 நமது சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆசிரியர்களுக்கு 38 % உள்ள அகவிலைப்படியே 42 % உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் எதிர்வரும் காலங்களில் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைபடி உயர்வை செயல் படுத்துவோம் என அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது*
*அதனைத் தொடர்ந்து மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துகள் தெரிவித்து கோரிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டது.*
*இந்த இனிய நிகழ்வில் நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். சங்கரப்பெருமாள் அவர்களும்,செயல் தலைவர் திரு T.தேவி செல்வம் அவர்களும்,மாநில ஒருங்கிணைப்பாளர் திரு R.சீனிவாசன் அவர்களும், மாநில துணைத் தலைவர் திரு S.செல்வகுமார் அவர்களும் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர் திரு. ருக்மாங்கதன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.*
➖➖➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு - ஊடகப்பிரிவு TNPET&PD ASSOCIATION.
Post a Comment