தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.
இன்று 09-05-2023 மாலை மாநில தலைவர் திரு எஸ். சங்கரப்பெருமாள் அவர்களும், மாநில செயல் தலைவர் திருT. தேவி செல்வம் அவர்களும் தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிப் பிரிவு அலுவலகத்திலும் பின்பு முதல்வர் அவர்களின் முதன்மை செயலர் உயர்திரு. உதயசந்திரன் அவர்கள் முக்கிய கூட்டத்தில் இருந்ததால் அவருடைய நேர்முக உதவியாளர் அவர்களிடம் நம்முடைய கோரிக்கைகள் மனு கொடுத்து பேசினோம்.
1)கலந்தாய்வு பணிமாறுதல் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் சேர்த்து நடத்த வேண்டும்.
2)அரசாணையின் படி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிடங்கள் வழங்க வேண்டும்.
3) அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்கள் வழங்க வேண்டும்.
4) மாணவர்கள் எண்ணிக்கை 150 க்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
➖➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு
TNPET&PD ASSOCIATION
➖➖➖➖➖➖➖
Post a Comment