08.05.2023 பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.

08.05.2023 நம் சங்கத்தின் சார்பாக பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை மாநில தலைவர் எஸ்.சங்கரப்பெருமாள் அவர்களும், மாநில செயல் தலைவர் திரு T.தேவி செல்வம் அவர்களும், மற்றும் மாநில துணைத் தலைவர் திரு எஸ். செல்வகுமார் அவர்களும்  இறவு  8:00 மணி அளவில் ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை தொடர்பாக பேசினார்கள்.

 *கோரிக்கைகள்*

1) தற்போது நடக்க உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

 2) அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 பணியிடங்கள் வழங்க வேண்டும்.

3)அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் வழங்க வேண்டும்.

4)அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும்.

 மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி ஆணையர் அவர்களுடன் இன்றைய பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்பு அரசாணை 525  மற்றும் NCTE உள்ளிட்ட ஆணைகளை வலியுறுத்தி பதவி உயர்வு தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.
நமதுகோரிக்கைகள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் உன்னிப்பாக படித்து பார்த்தார்.பின்பு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

➖➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு
TNPET&PD ASSOCIATION. ஊடகப் பிரிவு
➖➖➖➖➖➖➖

* உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு தேவையான அரசாணைகள்/ படிவங்கள் அனைத்து தகவல்களும் கீழே உள்ள இணையதளத்தில் கிடைக்கும்*
            
                👇👇👇👇👇


Post a Comment

Previous Post Next Post