*இன்று 05.05.2024 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில தலைவர் திரு S. சங்கரப்பெருமாள், செயல் தலைவர் திரு T. தேவிசெல்வம், மாநில ஒருங்கினைப்பாளர் திரு R. சீனிவாசன், மாநில துனை தலைவர் K. பவுன்ராஜ் மற்றும் மாவட்ட பொருப்பாளர் திரு. ஆரோக்கியதாஸ் ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி), நாட்டு நல பணி திட்டத்தின் இணை இயக்குனர் பொறுப்பு என்ற அடிப்படையில் சந்தித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை உடற்கல்வி இயக்குநர் நிலை II பணியிடமாக தரம் உயர்த்த கோரி மனு அளிக்கப்பட்டது. இக் கோரிக்கை சம்பந்தமாக ஏற்கனவே துறை ரீதியாக பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுள்ளது. விரைவில் அப்பணியிடங்கள் அனைத்தும் உடற்கல்வி இயக்குநர் நிலை II தரம் உயர்துவதற்கான வேலைகள் நடப்பதாகவும், விரைவில் அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இணை இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.*
*அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இயக்க போராளிகளுக்கு நம் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர், மாநில செயல் தலைவர் ,மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில துணைத்தலைவர் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு காத்திருப்போரின் கோரிக்கையினை வெற்றெடுத்திட வாழ்த்துறை வழங்கினார்.*
➖➖➖➖➖➖➖
TNPET&PD ASSOCIATION.
➖➖➖➖➖➖➖
Telegram : https://t.me/c/1290636394/198
Blogger: https://petpd.blogspot.com/?m=1
Post a Comment