கரூர் மாவட்டம், உடற்கல்வி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் முப்பெரும் விழா

 

                              கரூர் மாவட்டம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பில் 05.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11.05 க்கு கரூர்  மாவட்ட விளையாட்டு அரங்கில்"முப்பெரும் விழா"நடைபெற்றது.







                      

1.  பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா. 
2. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா. 
3. 2022- 2023 ம் கல்வியாண்டில் மாநில அளவில்/ தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்/மாணவியர்களின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்க்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பயிற்சியாளருக்கான வஞ்சி வளவன் விருது வழங்கும் விழா.

விழாவில் கரூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ந. கீதா அவர்கள் சிறந்த பயிற்சியாளருக்கானவஞ்சி வலவன் விருது வழங்கியும், பணி நிறைவு பெற்றவர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர், பணி உயர்வு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் திரு.பெ. கன்னிச்சாமி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் டாக்டர் .ச.உமா சங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருமதி.கா. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ந. கீதா  அவர்கள் பேசும்பொழுது முன் மாதிரியான ஒரு நிகழ்வு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வஞ்சி வலவன் விருது வழங்குவதன் மூலம் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த முடிகிறது, மற்றவர்களுக்கும் இந்த விருது பெற வேண்டும் என்று இன்னும் சிறப்பாக பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது . மேலும் வரும் கல்வி ஆண்டில் கரூர் மாவட்டம் மாநில அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும்  வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். அதற்கு அனைத்து உடற்கல்விஆசிரியர்களும் பாடுபட வேண்டும்.இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கூறினார்.


மாவட்ட கல்வி அலுவலர் திரு. பெ.கன்னியப்பன் அவர்கள் பேசுகையில் எந்த மாவட்டத்திலும் பார்த்திராத புதிய நிகழ்வாக இந்த விழா நடைபெறுகிறது பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சிறந்த பயிற்சியாளருக்கு விருது வழங்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றேன் என்று கூறினார்.

பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா. 





 டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா. 


 2022- 2023 ம் கல்வியாண்டில் மாநில அளவில்/ தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்/மாணவியர்களின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பயிற்சியாளருக்கான வஞ்சி வலவன் விருது வழங்கும் விழா.













விழா நிகழ்வு புகைப்படங்கள்...













































































Post a Comment

Previous Post Next Post