பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் தேவை...




தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.
21/11சிவராமன் தெரு, சென்னை-5.
 (பதிவு எண்: 69/ 2008.)

➖➖➖➖➖➖
மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
➖➖➖➖➖➖

14. 05 .2022 அன்று தினமலர் செய்தியில் 13.05. 2022 ல் நடந்த உடற்கல்வி தேர்வில் எந்த முன்னறிவிப்பு இல்லாமல் உடனடியாக தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி அறிவித்தவுடன் அவசர, அவசரமாக மாணவர்களுக்கு13.5 .2022 அன்று தேர்வு நடத்தப்பட்டது‌.*

நடைபெற்ற தேர்வில் சில பள்ளிகளில் மாணவர்கள் கேள்வித்தாள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டனர்.

உடற்கல்வி பாட எழுத்துத் தேர்வினை ஒரு கல்வி ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்த வேண்டும். தேர்வு விடைத்தாள்களை உடற்கல்வி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தலைமை ஆசிரியரிடம் அளிப்பார்கள்.மாணவர்களுக்கு மற்ற பாடத்தில் மதிப்பெண்கள் பதிவு செய்வது போல் உடற்கல்வி படத்துக்கான மதிப்பெண்ணை பதிவுசெய்வது கிடையாது .மேலும் DEO, CEO அதிகாரிகளும் உடற்கல்வி எழுத்து தேர்வு மதிப்பெண்களையும் சரிபார்ப்பது கிடையாது .
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா பிரச்சனை காரணமாக மாணவர்களுக்கு காலாண்டு அறையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்தனர்.மேலும் கொரானா குறைந்த பின்பு இந்த வருடம் ஜுலை மாதத்தில் இருந்து வகுப்புகள் ஒரளவு நடைபெற்றது ஆனால் உடற்கல்வி வகுப்புகளும் விளையாட்டும் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை பள்ளிகள் சரியாக உடற்கல்வி பாடவேளை ஒதுக்கீடு செய்யப்படவில்லை . மேலும்  கடந்த ஆண்டு பாடங்கள் நடத்தாத காரணத்தினால் அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு காலாண்டு /அறையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்  அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்தனர்.மேலும் கொரோனா தொற்று குறைந்த பின்பு இந்த வருடம் ஜுலை மாதத்தில் இருந்து வகுப்புகள் ஒரளவு நடைபெற்றது.ஆனால் உடற்கல்வி வகுப்புகளும் விளையாட்டும் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை மேலும் உடற்கல்வி ஆசிரியர்களை கொரோனா தொடர்பான பணிகளை மட்டும் செய்யச் சொன்னார்கள் இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு உடற்கல்வி பாட வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி கேட்டோம். பின்பு நவம்பர் மாதத்திற்கு பின்பு பள்ளிகளில்உடற்கல்வி மற்றும் விளையாட்டு பணிகள் தொடர்வதற்கு அனுமதிகொடுத்தார்கள். ஆனால் பல தலைமையாசிரியர்கள் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதிக்கவில்லை இதனால் மாணவர்கள் ஒழுங்கு கட்டுப்பாடு மிகவும் மோசம் அடைந்து வருகிறது.இதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள்தான் காரணம்.பள்ளிக்கல்வித்துறை அனுப்பும் உடற்கல்வி பாடத்திட்டங்கள் (Sylabus) உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கொடுப்பதில்லை மேலும் உடற்கல்வியில் பாட புத்தகங்கள் கிடையாது இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்பு இருந்த தெரிந்த பாடத்திட்டத்தின் அடைப்படையில் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 2022-2023 கல்வியாண்டில் மாணவ/ மாணவியருக்கு முறையாக உடற்கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கி உடற்கல்வி பாட தேர்வுகளை முறையாக நடத்திட தேவையான முயற்சிகளை முன்னெடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உடற்கல்வி தேர்வு குறித்து தவறான செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் செய்தியினை எங்கள் சங்கத்தின் சார்பாக மறுக்கிறோம்.

➖➖➖➖➖➖
 எஸ்.சங்கரப்பெருமாள்.
மாநிலத்தலைவர்.

ஆர். ரத்தினகுமார்.
 மாநில பொதுச் செயலாளர்.

மா.மு.சதீஸ்.
மாநில பொருளாளர்.

எஸ்.செல்வகுமார். 
செயல் தலைவர்.

14.05.2022

Post a Comment

Previous Post Next Post