*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.*
*21/11 சிவராமன் தெரு*
*சென்னை-5.*
➖➖➖➖➖➖
🔔 *வன்மையாக கண்டிக்கின்றோம்.* 🔔
➖➖➖➖➖➖
*மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்*
💥💥💥💥💥
*நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வசூரியா என்ற மாணவன் பிளஸ் -2 படித்து வந்தார். கடந்த 26 -ந்தேதி அன்று பள்ளியில் செல்வசூரியாவுக்கும் 11- ம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.இதில் எதிர்தரப்பு 3 மாணவர்கள் அங்கு இருந்த கற்கலை எடுத்து செல்வசூரியாவை தாக்கி உள்ளனர்.*
*இதில் படுகாயம் அடைந்த மாணவர் செல்வசூரியா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்நிலையில் செல்வசூரிய கொலைவழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் கைது செய்தனர்.*
*இந்நிலையில் அம்பை அருகில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அங்கு பணியாற்றும் அரசுபள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் சீபா பாக்கியமேரி ஆகிய இருவரை முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.சம்பவம் நடந்த அன்று தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருந்தனர் ஆனால் உடற்கல்வி ஆசிரியர்களை மட்டும் பணிநீக்கம் செய்து உள்ளனர்.மற்ற ஆசிரியர்களுக்கு பாட வேலை இருப்பது போல் உடற்கல்விஆசிரியர்களுக்கும் பாட வேலை இருப்பது முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தெரியாதா? மேலும் பள்ளியில் அடிக்கடி இருபிரிவு மாணவர்களுக்கு மோதல் நடைபெற்றுவந்துள்ளது.தலைமையாசிரியர் அவர்களுக்கும் தெரியும்.ஏன் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்கூறிய நடந்த நிகழ்விற்கு எந்த சம்பந்தம் இல்லாத இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்த முதன்மை கல்வி அலுவலரை வன்மையாக கண்டிக்கிறோம்.*
*உடனடியாக பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.*
💥💥💥💥💥
*எஸ்.சங்கரப்பெருமாள்*
*மாநிலத்தலைவர்.*
*ஆர். ரத்தினகுமார்.*
*மாநில பொதுச் செயலாளர்.*
*மா.மு.சதீஸ்.*
*மாநில பொருளாளர்.*
01.05.2022
Post a Comment