உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு


*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம். 21/11-சிவராமன் தெரு, சென்னை -5.*

*இன்று 26.04.2022 நமது சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் திரு . S.சங்கரப்பெருமாள் அவர்களும், சென்னை மாவட்ட தலைவர் K.A. ரமேஷ்பாபு அவர்களும், சென்னை மாவட்ட செயலர் திரு. S.ஆரோக்கியதாஸ் மற்றும் சென்னை மாவட்ட பொருளாளர் திரு. G. ராஜகுரு ,மாநில செயற்குழு உறுப்பினர் திரு.J. விஜய கணபதி ஆகியோர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது இல்லத்தில் காலை சந்தித்து நமது உடற்கல்வி துறை சார்ந்த நீண்டநாள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.*

✒️ *உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பெயர் மாற்றம்.*

✒️ *உடற்கல்வி இயக்குநர் நிலை 1, நிலை 2 புதிய பணியிடங்கள் ஏற்படுத்துதல்.*

✒️ *அரசாணை எண்:177 திருத்தம்.*

✒️ *அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் பணியிடத்தை உறுதி செய்தல்.*

✒️ *ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு  வழங்குதல்.*

✒️ *பட்டதாரி ஆசிரியருக்கு இணையான ஊதியம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்குதல்.*

*Needed post உள்ள  பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் நிலை 2 பணியிடத்திற்கு உடனடியாக பதவி உயர்வு மூலம் பணியிடத்தை நிரப்புதல்.*

*மேற்கண்ட  உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நம்மிடம் விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.*


➖➖➖➖➖➖➖
செய்தி வெளியீடு
TNPET&PD ASSOCIATION
ஊடகப்பிரிவு.
➖➖➖➖➖➖➖

Post a Comment

Previous Post Next Post