பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.
திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் சாஃப்ட்ர் மேல்நிலைப்பள்ளியில் 17.12.2021 ம் தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூனறு மாணவர்கள் பலியானார்கள்.நால்வர் காயமுற்றனர்.இது தொடர்பாக பள்ளிக்கல்வி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் ஒப்பந்ததாரர் உட்பட மூன்று பேர் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 உடற்கல்வி ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது ஏற்புடையது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உடற்கல்வி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவித்தக் கொள்கிறோம்.
பள்ளியில் நிர்வாகக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் உள்ளது ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் பள்ளிக்கல்வி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்வார்கள்.அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. அந்தப் பள்ளிக்கு எப்படி அங்கீகாரம் கொடுத்தார்கள். அடுத்து அந்தப் பள்ளிக்கு கட்டிடம் உறுதி தன்மை சான்றிதழ் கொடுத்த வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி துறையில் உள்ளவர்கள் மீது ஏன்நடவடிக்கை எடுக்க வில்லை? இந்த விபத்துக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு.இந்த விபத்திற்கு தொடர்பில்லாத 3 உடற்கல்வி ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுத்தது சட்டப்படி குற்றமாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் நிர்வாகமும் உண்மையை மூடி மறைப்பதற்கு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் நியாமான முறையில் விசாரணை செய்து மேற்கூறிய குழுக்களில் உள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இந்த விபத்துக்கு எந்த தொடர்பும் இல்லாத 3 உடற்கல்வி ஆசிரியர்கள் மீது எடுத்த நடவடிக்கையினை ரத்து செய்யும்படி எங்கள் சங்கத்தின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
எஸ். .சங்கரப்பெருமாள்.
மாநிலத்தலைவர்.
ஆர். ரத்தினகுமார்.
மாநில பொதுச் செயலாளர்.
மா.மு. சதீஷ்.
மாநில பொருளாளர்
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்
21/11சிவராமன் தெரு ,சென்னை-5.
Post a Comment