தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்...

 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்...


                     தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 12. 12 .2021 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு எஸ். சங்கரப்பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார், மாநில பொருளாளர் திரு மா.மு. சதீஷ் தலைமை நிலைய செயலர் திரு K. லிங்கேசன் அவர்கள் மாநில துணைத் தலைவர்கள் திரு.B. பஞ்சாபகேசன், திரு N. சுரேஷ் குமார், திரு S.பிச்சை மற்றும் திரு J.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


மாநில செயல் தலைவர் திரு எஸ். செல்வகுமார் சங்கத்தின் கடந்த ஆண்டு செயல் திட்டங்கள் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாநில பொருளாளர் 2020 21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார் சபை ஏற்றுக் கொண்டது. கூட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். திருச்சி மண்டலச் செயலர் திரு S.பாஸ்கர் அவர்கள் வரவேற்புரையாற்றினார் நிறைவாக திருச்சி மாவட்ட செயலாளர் திரு எஸ். ரமேஷ் குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்.

  தீர்மானங்கள்

         நடுநிலை /உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்  6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான  ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

     தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலை/ உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பணியிடம் ஏற்படுத்தி  உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 , நியமனம் செய்யப்பட வேண்டும்.


     அனைத்து  மேல்நிலைப்பள்ளிகளிலும்  முதுகலை  உடற்கல்வி  இயக்குநர் நிலை - 1 பணியிடங்கள் வழங்கி  உடற்கல்வி இயக்குநர் நிலை - 2  மற்றும் உடற்கல்வி ஆசிரியரகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.


     அரசாணை எண். 177 நாள்.13.10.2016. திருத்தம் செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு   நியமன கல்வித் தகுதிக்கு மேல் பெற்ற உயர்கல்வியினை வரிசைப்படுத்தாமல் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படவேண்டும்.


     2008 - 2009 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மான்யக கோரிக்கையில்  உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் ( உடற்கல்வி) எனவும், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்தை முதுகலை ஆசிரியர் (உடற்கல்வி) எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  ( அரசு  முதன்மை  செயலர்  கடித எண் 27754 / மேநிக 2 / 2009-1. நாள் 22. 9. 2009) ஆனால் இதுவரையில் அரசாணை வெளியிடப்படவில்லை.தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு பெயர் மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.


     பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை 2020-2021  கல்வி ஆண்டிலேயே முழுநேர ஆசிரியர்களக பணி உயர்வு  செய்யப்பட வேண்டும்.


   புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவரப்பட வேண்டும்.

          உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் 20% முதுகலைப்பட்டதாரி  பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.


     2016 - 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்  சங்கத்தின் நன்றி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


   உடற்கல்வி ஆசிரியர்களுக்கு B.P.Ed மற்றும் M.P.Ed படிப்பதற்கு Summer Course அனைத்து உடற்கல்வி கல்லூரியில் தொடங்க வேண்டும்.

        காலியாக உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்  மற்றும் மாவட்ட  உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.

























































 

 


Post a Comment

Previous Post Next Post