உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8:45 பள்ளிக்கு வருகை தரவேண்டுமா ?தவறான தகவல்...

 



தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.

 (பதிவு எண் 69 2008) 
21/ 11 சிவராமன் தெரு ,
சென்னை -5.






        கரூர், மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஓ.மு.எண்.6488/அ1/2021 நாள்:  .12.2021ன் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் கீழ் தகவல் வழங்கியுள்ள தகவலில்.


வினா எண்  5  க்கன தகவலில் உயர்நிலைப்  பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 9:15 வருகை தரவேண்டும் என தகவல் தெரிவித்துள்ளார்.
வினா எண் 6 க்கான தகவலில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8:45 பள்ளிக்கு வருகை தரவேண்டும் என தகவல் அளித்துள்ளார்.

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அல்லது ஆணையர் அவர்களின் செயல்முறை, அரசாணைகளில் இல்லாத தகவலை தந்துள்ளது   ஆசிரியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்கள்பள்ளிக்கு வருவதற்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை . 

இதுதொடர்பாக இன்று  மாநிலத் தலைவர் எஸ். சங்கரப் பெருமாள் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று மாலை கரூர், மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு முரணான தகவல் தரப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினோம்.

கரூர்,மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தான் வெளியூரில் இருப்பதாகவும் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளரை சந்தித்து உடற்கல்வி ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு 8:45 மணிக்கு பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்பதற்கான பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட  அரசாணை அல்லது செயல்முறைகள் இருந்தால் கொடுக்கவும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

கரூர்,மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல் கரூர் மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்ற தகவலை தெரிவித்தார்கள். அவர்களின் வாதம் ஏற்புடையது அல்ல என தீர்க்கமாக எடுத்துக் கூறியதுடன். ஆசிரியர்களின் பணி நேரம் தொடர்பான அரசாணை கரூர் மாவட்டத்திற்கு மட்டும்  வெளியிடும் அதிகாரம் கரூர், மாவட்ட கல்வி அலுவலருக்கு இல்லை என்பதையும் , உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான நமது சங்கத்தின் சார்பாக கோரிக்கையை உரிய வழியாக பதிவஞ்சலில் அனுப்பி உரிய விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தேவைப்படும் பட்சத்தில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் மூலமாக உரிய விளக்கத்தை பெற நமது சங்கம் தயாராகவே உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிக்கு காலை 8:45 மணிக்கு வருவது தொடர்பாக இதுவரை தமிழக அரசு அல்லது பள்ளிக் கல்வித்துறை எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை . கரூர் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தவறான தகவலை தந்துள்ளார்  என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.


தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்
21/11சிவராமன் தெரு,
சென்னை-5.

எஸ்.சங்கரப்பெருமாள். மாநிலத்தலைவர்.

ஆர். ரத்தினகுமார்.மாநில பொதுச் செயலாளர்.

 மா.மு. சதீஷ்.
மாநில பொருளாளர் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர்.

சீ.கு மகாமுனி, கரூர் மாவட்ட தலைவர்.

 பா.மணிமாறன் ,கரூர் மாவட்ட  பொருளாளர்.

 மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள்.


 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் தகவல் மற்றும் உடற்கல்வி துறை சார்ந்த தகவல்களுக்கு ........

Telegram link



Blogger



Website



Twitter



WhatsApp 1 link- WhatsApp 1 
WhatsApp 2 link- WhatsApp 2
 

Post a Comment

Previous Post Next Post