🌹🌹💫🌹🌹
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், 21/11சிவராமன் தெரு, சென்னை-5
🌹🌹💫🌹🌹
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின் படி நாளை (1.11.2021) முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைஉள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய உள்ளார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் நாளை முதல் மாணவர்களுடன் செயல்பட உள்ளது.
கொரானா பிரச்சினையின் காரணமாக 18 மாதங்களுக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை இதனால் மாணவர்களின் கற்றல் திறன் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தாலும் மாணவர்கள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு online மற்றும் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக கல்வி கற்பித்து வந்தார்கள்.
நாளை முதல் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் தலைமையாசிரியரின் வழிகாட்டுதலின் படி மாணவர்களை உற்சாசப்படித்தி வரவேற்பேம். மேலும் உடற்கல்வி பாடவேலை இல்லை என்று நினைக்காமல் முடிந்தவரையில் வாய்ப்பு கிடைக்கும் போது வகுப்பறையில் உடற்கல்வி தொடர்பாகவும், தனிமனித இடைவெளி, முகக்கவசம்(Mask) அணிவதால் ஏற்படும் பயன்கள், சானிடைசர் மற்றும் சோப்பால் கை கழுவுதல் ஏற்படும் பயன்கள் மற்றும் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் SOP கடை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்தி இனிப்புகள் வழங்கி வரவேற்பு நல்கிட வேண்டும்.
மேலும் நம்முடைய உரிமையினையும் மறியாதையினையும் விட்டுக் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும்.நாளை தவிர்க்க முடியாத காரணத்தை தவிர அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏
அன்புடன்
எஸ்.சங்கரப்பெருமாள்
மாநிலத் தலைவர்
🙏🙏🙏🙏🙏
Post a Comment