தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்-தீர்மானங்கள் மற்றும் புகைப்படம்

 





தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்

                                                                                                                                                                    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்  சங்கத்தின்  மாநில செயற்குழுக் கூட்டம்  24.07.2021 அன்று பிற்பகல் 3.30 அளவில் திருச்சி அருண் ஹோட்டலில்   நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாநிலத்தலைவர் திரு எஸ்.  சங்கரப்பெருமாள்  அவர்கள் தலைமை தாங்கினார்

                              செயல்தலைவர்திரு. S.செல்வகுமார்,துணைத்தலைவர்கள் திரு. B.பஞ்சாபகேசன்,   திரு.R.M.செந்தில்குமார்,மற்றும் இணைச் செயலாளர் திரு .A.சிட்டி பாபு. ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் திரு, R.ரத்தினகுமார் சங்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றி கூறினார்.  மாநில  பொருளாளர் திரு. மா.மு.சதீஷ் அவர்கள் சங்கத்தின் 2020-2021ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்  சபை ஏற்றுக் கொண்டது. அனைத்து மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்திருந்த மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  கலந்து  கொண்டார்கள். திருச்சி  மாவட்ட தலைவர் திரு.G.புகழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறைவாக திருச்சி மாவட்ட செயலாளர்  திரு.S.ரமேஷ்குமார் அவர்கள் நன்றியுரை கூறினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட.
                                                                                                                                                                                                 

தீர்மானங்கள்

1.                                                                                                புதிதாக பதவியேற்றிருக்கும் தமிழக அரசிற்கும்  மாண்புமிகு  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

2.       நடுநிலை /உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்  6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான  ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

3.       தரம் உயர்த்தப்பட்ட அனைத்து நடுநிலை/ உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பணியிடம் ஏற்படுத்தி  உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

4.       அனைத்து  மேல்நிலைப்பள்ளிகளிலும்  முதுகலை  உடற்கல்வி  இயக்குநர் நிலை - 1 பணியிடங்கள் வழங்கி  உடற்கல்வி இயக்குநர் நிலை - 2  மற்றும் உடற்கல்வி ஆசிரியரகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

5.       அரசாணை எண். 177 நாள்.13.10.2016. திருத்தம் செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு   நியமன கல்வித் தகுதிக்கு மேல் பெற்ற உயர்கல்வியினை வரிசைப்படுத்தாமல் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படவேண்டும்.

6.       2008 - 2009 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மான்யக கோரிக்கையில்  உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் ( உடற்கல்வி) எனவும், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்தை முதுகலை ஆசிரியர் (உடற்கல்வி) எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  ( அரசு  முதன்மை  செயலர்  கடித எண் 27754 / மேநிக 2 / 2009-1. நாள் 22. 9. 2009) ஆனால் இதுவரையில் அரசாணை வெளியிடப்படவில்லை.தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு பெயர் மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

7.       காலியாக உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்  மற்றும் மாவட்ட  உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.

8.       SSA மூலமாக பணிபுரியும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளிக்கல்விக்கு பணி மாற்றம் செய்து TRB மூலமாக அவர்களுடைய பணிமூப்பு மற்றும் தகுதியின் (Merit)அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட வேண்டும். அது வரையில் அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ரூ15000/= வழங்கப்பட வேண்டும்.

9.       தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

10.    உடற்கல்வி ஆசிரியர்களுக்கு B.PEd மற்றும் M.P.Ed படிப்பதற்கு Summer Course அனைத்து உடற்கல்வி கல்லூரியில் தொடங்க வேண்டும்.

11.   மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களில் 50% உடற்கல்வி இயக்குநர் நிலை 2 ல் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 1  பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் அடுத்து 50% ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) மூலமாக நேரடி நியமனத்தில் பணிபுரியும்  உடற்கல்வி இயக்குநர் நிலை 1ல் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தற்போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பில் உள்ள பணி மூப்பின் அடிப்படையில் TRB மூலமாக பணிபுரிகிறவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

12.   உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் B.Ed  M.A/M.Sc/M.Com உள்ளிட்ட கல்வித்தகுதிகளுக்கும் வழங்க வேண்டும்.

13.    உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் 20% முதுகலைப்பட்டதாரி  பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

14.   உயர்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வித்துறையை ஆய்வு செய்வதற்கு உடற்கல்வி இயக்குநர் நிலை 2 ல் உள்ளவர்களை கல்வி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் வழங்கி நியமனம் செய்ய வேண்டும்.      

                                               Telegram link- Telegram link 

                                           Website link- Website 

                
                                        Twitterlink- Twitter 

                               WhatsApp 1 link- WhatsApp 1 

                              WhatsApp 2 link- WhatsApp 2











 


































































Post a Comment

Previous Post Next Post