தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக ஆணையர் உயர்திரு. க. நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டார்.
நேற்று ( 8.07.20210 ) பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகத்திலிருந்து நமது சங்கத்திற்கு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டி உள்ளதால் நாளை (09.07.2021) காலை 10 மணியளவில் பள்ளிக்கல்வி ஆணையரை சந்திக்குமாறு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது .
பள்ளிக்கல்வி ஆணையரின் அழைப்பை ஏற்று இன்று 09.07.2021 காலை 10.00 மணிக்கு நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு.எஸ் .சங்கரப்பெருமாள் அவர்களும், மாநில செயல் தலைவர் திரு. எஸ் .செல்வகுமார் அவர்களும் , தலைமை நிலையச் செயலர் திரு. எஸ் .லிங்கேசன் அவர்களும் , மாநில இணைச் செயலா ளர் திரு .எஸ் .ஆரோக்கியதாஸ் அவர்கள், மணடல செயலர் திரு . எம்.பாண்டியன், அவர்களும் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் திரு. எஸ். ரமேஷ் பாபு அவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
பள்ளிக்கல்வி ஆணையர் உயர்திரு. க.நந்தகுமார் . இ.ஆ.ப. அவர்கள் உடனான பேச்சுவார்த்தை இன்று சுமார் 0. 40 நிமிடங்கள் நடைபெற்றது . பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) அவர்களும் கலந்துகொண்டார். நமது உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக படித்துபார்த்து விளக்கம் கேட்டுக்கொண்டார்.
உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆணையர் உறுதியளித்தார்.
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் உடனான பேச்சுவார்த்தை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என பேச்சுவார்த்தை குறித்து மாநிலத் தலைவர் திரு.எஸ்.சங்கரப்பெருமாள் அவர்கள் கூறியுள்ளார் . கூடிய விரைவில் உடற்கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளோம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் தகவல் மற்றும் உடற்கல்வி துறை சார்ந்த தகவல்களுக்கு நமது குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .
Telegram link- Telegram link
Website link- Website
Twitterlink- Twitter
WhatsApp 1 link- WhatsApp 1
WhatsApp 2 link- WhatsApp 2
Post a Comment