TRB - உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் & ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சிவராமன் தெரு, சென்னை-5. 17.03.2021 அன்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில தலைவர் திரு எஸ். சங்கரப்பெருமாள், மாநில பொருளாளர் திரு மா.மு. சதீஷ் , மாநில செயல் தலைவர் திரு. எஸ். செல்வகுமார், மாநில இணைச் செயலாளர் திரு எஸ். ஆரோக்கியதாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு.G கென்னடி அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர் திரு L. நிர்மல் ராஜ் இ.ஆ.ப(CHAIRMAN) அவர்களை நேரில் சந்தித்து உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இடம் பெறாதது குறித்தும் விடுபட்ட கல்வித்தகுதிகளை சேர்த்த பின்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உயர்திரு ஆசிரியர் தேர்வு வாரிய இயக்க தலைவர் அவர்கள் உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உயர்திரு முனைவர் அறிவொளி மற்றும் அலுவலர்களை அழைத்து நமது கோரிக்கை தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக 30 நிமிடங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. விடுபட்ட கல்வித்தகுதிகளை சேர்ப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னிச்சையாக எந்தவித முடிவும் மேற்கொள்ள இயலாது என்றும். 2020 ம் ஆண்டு அரசாணையில் மாற்றம் செய்து வெளியிட பட்டால் மட்டுமே விடுபட்ட கல்வித்தகுதிகளை தங்களால் சேர்க்கையிலும் என விளக்கம் தந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை சந்தித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வில் விடுபட்ட கல்வித்தகுதிகளான B.M.S.,B.P.Es.,B.P.Ed. M.P.Ed.,M.P.E.S. உள்ளிட்ட படிப்புகளையும் சேர்த்து தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டது. இதனால் 20 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு காத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும். தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள பயிற்சி வகுப்பிற்கு செல்வதா வேண்டாமா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் விடுபட்ட கல்வித் தகுதிகளையும் சேர்த்து தேர்வு நடத்த உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் இது சம்பந்தமாக உயர் அலுவலர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளார்.
Samagra Shiksha திட்டத்தின் கீழ் துவக்கப்பள்ளிகளுக்கு 5,000/-, நடுநிலைப் பள்ளிகளுக்கு 10,000/-, அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு 25,000/- ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகளிடம் இருந்து தேவைப் பட்டியல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு உபகரணங்கள் தரம் வாய்ந்ததாகவும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் வண்ணம் பொருட்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என மாநில திட்ட இணை இயக்குனர் திரு K. செல்வகுமார் அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் தேவைப் பட்டியல் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இணை இயக்குனர் அவர்கள் தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post