உடற்கல்வி ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், சிவராமன் தெரு, சென்னை-5. 
நமதுசங்கத்தின் மாநில நிர்வாகிகள் 12.01.2021 அன்று கோரிக்கை தொடர்பாகவும், புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாகவும் பள்ளிக்கல்வி ஆணையர் திரு,V. வெங்கடேஷ் அவர்களையும், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு ச.கண்ணப்பன் அவர்களையும் மற்றும் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி), இணை இயக்குனர் (தொழில் கல்வி), இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) இணை இயக்குனர் (நாட்டு நலப்பணித் திட்டம்) மற்றும் தேர்வுத்துறை இயக்குனர் அவர்களை சந்தித்தார்கள்.உடற்கல்வி துறையின் இன்றைய நிலவரம் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் இயக்குநரிடம் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நமது கோரிக்கைகள் தொடர்பாக வெகு விரைவில் மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகும் என்ற தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.

நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் 07.12.2019 பள்ளிக்கல்வி ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை சந்தித்து துவக்க பள்ளிகளுக்கு ரூபாய் 5000/-, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 10000/-, அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 25000/- விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விலையில்லா உடற்கல்வி பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதற்கு நமது சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

  1, உடற்கல்வி ஆசிரியர்களை பட்டதாரி உடற்கல்விஆசிரியர் எனவும், உடற்கல்வி இயக்குநர்களை முதுகலை பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை உடனடியாக வெளியிட கோரிக்கை.

2, அரசாணை எண் 177 ஐ திருத்தம் செய்து நியமன கல்வித் தகுதிக்கு மேல் ஏதேனும் இரண்டு உடற்கல்வி துறை சார்ந்த உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெரும்வகையில் அரசாணை திருத்தங்கள் செய்து வெளியிடப்பட வேண்டும்.

3,விளையாட்டு உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.

4,இரண்டு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் 38 மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை உடனடியாக நியமனம் செய்தல் .

5,பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயர்வுடன் கூடிய முழுநேர பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

6,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நிரப்பப்படாமல் உள்ள மீத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 

  7,அனைத்து நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்துதல்.அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.

8,உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பணியிடங்கள் அதிகப்படுத்தி பதவி உயர்வு வழங்க வேண்டுமாய் இயக்குநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.

மேற்கண்ட முக்கிய கோரிக்கைகளுடன் உடற்கல்வி துறை சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருமாறு மாநிலத் தலைவர் எஸ். சங்கர்ப்பெருமாள் அவர்கள் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் திரு.R. ரத்தினகுமார், மாநில பொருளாளர் மா.மு.சதீஷ், மாநில செயல் தலைவர் எஸ். செல்வகுமார், மாநில இணைச் செயலாளர் திரு A.சிட்டிபாபு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.M. பாண்டியன், சென்னை மாவட்ட நிர்வாகிகள் திரு. S.ஆரோக்கியசாமி மாவட்ட செயலாளர் மற்றும் திரு.K. ரமேஷ் பாபு மாவட்ட தலைவர் மற்றும் பல நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

1 Comments

  1. உடற்கல்வித்துறையின் வளர்ச்சி மேலும் மேலும் இமயம் போல உயர்க !அரசு பள்ளி மாணவர்கள்வானளாவியபயன் பெறுக!! உங்கள் அயராத பணிமேலும் மேலும் தொடர்க! பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏👍

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post