*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், (பதிவு எண் 69 / 2008)*
*11,சிவராமன் தெரு, சென்னை-5*
➖➖➖➖➖➖➖➖
✉️ *மாநிலத் தலைவர் எஸ்.சங்கர்ப் பெருமாள் அவர்களின் செய்தி குறிப்பு*
➖➖➖➖➖➖➖➖
*உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு அரசாணை எண். 324 மற்றும் அரசாணை எண். 177 யின் படி P.G.Dip.Yoga & M.Phil... உள்ளிட்ட அனைத்து உயர்கல்விக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் M.Phil மற்றும் Yoga உள்ளிட்ட உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்குவதற்கு சில மாவட்டங்களில் மறுப்பதாகத் தெரிகிறது.இது தொடர்பாக பள்ளிக்கல்வி செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுத்து பேசி உள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் உயர்கல்வி பெற்றவர்கள் இரண்டு ஊக்க ஊதியத்திற்கான உரிமை கோரல் மனுவினை தலைமையாசிரியர் அவர்களுக்கு கொடுக்கவும் அவர் விண்ணப்பத்தை ஏற்க மறுத்தால் . உயர்கல்வி ஊக்க ஊதிய கோரும் விண்ணப்பத்தினை பதிவு தபாலில் அனுப்பவும்.ஊக்க ஊதியம் 2021 மார்ச வரையில் தான் உரிமை கோர முடியும் அதற்கு பின்பு கிடையாது அரசாணை எண். 324 ன் படி ஊக்க ஊதியம் கிடைக்காதவர்கள்& பாதிக்கப்பட்டவர்களுக்காக நமது சங்கத்தின் சார்பாக நீதி மன்றத்தில் உடனடியாக வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.*
Post a Comment