தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இன்று 3.11 2020 மற்றும் நாளை 4.11.2020 கலந்தாய்வு  நடைபெற்று வருகிறது .கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கின் காரணமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடப்படவில்லை பின்பு. வழக்கு முடிந்ந பின்பு அரசாணை வெளியிடப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியலில் சிலருக்கு  பதிவு மூப்பிற்கு 5  மதிப் பெண்கள் வழங்கப்படவில்லை  பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முறையீடு செய்தார்கள் அதன்பின்பு சரிசெய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தெரியாமல் சில பேர் சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் பெயரில் தவறான செய்திகளை தந்தி தொலைக் காட்சியில் வெளியிடப்பட்து. .இதில் சில பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய பிரச்சனைகளுக்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்  சங்கத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையீடு செய்தோம்.பின்பு TRB முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று அறிவிப்பு மனு கொடுத்தோம் பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சங்கத்தின்  மூலமாக விடுத்த முறையீடு காரணமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை எந்த முறைகேடும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது .    இந்நிலையில் தந்திதொலைக்காட்சியில் சில பேர் சங்கத்தில் இல்லாதவர்கள் கொடுத்த தவறான தகவலின்  அடிப்படையில்   தவறான செய்திகளை  வெளியிடப்பட்டுள்ளது.
தயவு கூர்ந்து தவரான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
எஸ்.சங்கரப்பெருமாள்.
மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள்.

Post a Comment

Previous Post Next Post