💐💐💐💐💐💐
🎂🎂 *பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்* 🎂🎂
💐💐💐💐💐💐
*அகவை 68 காணும் எனது ஆருயிர் தலைவா!*
*உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வணங்குகிறேன்!*
*இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொடுமையான covid-19 காலத்திலும் கோபப்படாமல் குணமாக எங்களை வழி நடத்தும் உடற்கல்வி த்துறைக்கு கிடைத்த வைரமே! வைடூரியமே! உங்களை வணங்குகின்றோம்.*
*இந்திய வரலாற்றிலும் இப்படி ஒரு தலைவன் ஒரு சங்கத்திற்கு இத்தனை நாள் தலைவனாக பயணித்த தில்லை ! இனி பயணிக்க போவதுமில்லை . உங்களுக்கு நிகர் நீங்கள் தான் தலைவா! வணங்குகிறேன்.*
*விருதுநகர் மாவட்டம் உடற்கல்வி துறைக்கு தந்த முத்தும் நீ... எங்கள் சங்கத்தின் சொத்தும் நீ....*
*காமராஜர் வாழ்ந்த மாவட்டத்தில் இருந்து வந்த உடற்கல்வி துறை காவலனே கலங்கரை விளக்கே... உங்களை வணங்குகிறேன்!*
*ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டத்தை சென்னையிலிருந்து நடத்தியவர்! பல்வேறு சங்கங்களின் நண்பனாகவும் சிலருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்பவரே வாழ்க பல்லாண்டு!*
*உடற்கல்வித் துறைக்கு கிடைத்த முத்து உங்களால் பயன்பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பல பேர் அவர்களுக்காகவே வாழ்கிறீர்கள், உங்களை வாழ்த்துகின்றேன் வள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் முதல் சென்னை மாநகரம் வரை அனைத்து மாவட்டங்களும் உன் பின்னால்*
*உடற்கல்வி கல்வி துறையின் ஒளி விளக்கே வாழ்க! பல்லாண்டு!*
*உங்களை தூற்றுபவர்களுக்கும் உதவி என்று தங்களை நாடி வந்துவிட்டால் உள்ளன்போடு உதவி செய்யக்கூடிய நல்லவரே நீர் வாழ்க! உமதுபுகழ் வாழ்க!*
*உடற்கல்வி துறையில் உங்கள் பயணம், தாங்கள் கடந்த தூரம் பயணம் யாராலும் கடக்க முடியாது!*
*அரசு அதிகாரிகளிடம் நீங்கள் பேசும்போது உங்களுடைய கம்பீரம் உங்கள் தெளிவு! பேச்சில் திறமை நான் கண்டு வியந்தது உண்டு எங்களுடைய துயர் துடைத்த சூரியனே உனது வெளிச்சம் தமிழகத்தை கடந்து பயணிக்கட்டும். என்றும் உங்கள் வழியில்*
*எனது வாழ்க்கையில் எனக்கு பல தகவல்களைச் சொல்லி என்னை சிற்பி ஆக்கி செயல் தலைவன் என்று என்னை உருவாக்கிய உடற்கல்வியின் சிற்பியே என்றும் உங்கள் வழியில் பயணிக்கும் உங்கள் அன்பு தம்பி*
*சு. செல்வகுமார்*
*செயல் தலைவர்*
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*
*காஞ்சிபுரம் மாவட்டம்*
➖➖➖➖➖➖➖➖
*செய்தி வெளியீடு-TNPET&PD ASSOCIATION. ஊடகப்பிரிவு*
Post a Comment