உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

 தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்.

சிவராமன் தெரு,

சென்னை- 5..


👍👍🙏🙏👍👍

நமது சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்WP NO 27784/2010ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் உடற்கல்வி இயக்குநர்களுக்கு முதுகலை பட்டதாரி ஊதியமும் வழங்கப்பட வேண்டுமென்று நமது சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் எஸ். சங்கரப்பெருமாள் அவர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 20.07.2017 அன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று நமது சங்கத்தின் சார்பில் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் துணைச் செயலர் அவர்கள் நமது வழக்கு தொடர்பாக மற்றும் நமது கோரிக்கை தொடர்பாக நமது சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நமது சங்கத் மாநில தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.


தமிழகஅரசின் துணைச் செயலர் அழைப்பினை ஏற்று மாநில நிர்வாகிகள் வருகின்ற 12.08.2020 அன்று பிற்பகல் 12:00 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாநில தலைவர் எஸ். சங்கரப்பெருமாள் அவர்களுக்கு அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.











Post a Comment

Previous Post Next Post