*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், சிவராமன் தெரு சென்னை- 5.*
*இன்று மாலை நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு. எஸ். சங்கரப் பெருமாள் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில செயல் தலைவர் மற்றும் தலைமை நிலையச் செயலர், ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.*
*இக்கூட்டத்தில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.*
*வருகின்ற 01.08.2020 (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் காணொலிக் காட்சியின் வாயிலாக நடைபெற உள்ளது கூட்டத்திற்கான google meet link நமது மாநில குழுவில் அனுப்பப்படும். அந்த link ஐ பயன்படுத்தி காணொலி காட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*
🙏🙏🙏🙏🙏🙏🙏
➖➖➖➖➖➖➖➖➖
*எஸ்.சங்கரப்பெருமாள்*
*மாநிலத் தலைவர்*
➖➖➖➖➖➖➖➖➖
Post a Comment