ஆசிரியர்களுக்கு பாட புத்தகம் வழங்கும் பணி

*---------------------------*
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், சிவராமன் தெரு, சென்னை-5*
*----------------------------*



*பள்ளிக் கல்வி துறையானது  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் 13.7.2020 முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது*

 *அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்குவதற்கு உண்டான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அனைத்து நிலை  ஆசிரியர்களையும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது*
*தற்சமயம் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முற்றிலும் இயங்காத சூழ்நிலையில் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது*

*மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை வருகை புரிய வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்து   அரசு அலுவலகங்கள் செயல்படுவது போல் 50%  ஆசிரியர்கள் அல்லது ஆசிரியரின் எண்ணிக்கைக்கு  ஏற்ப சுழற்சி முறையில் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியில் ஈடுபட வைப்பது நோய்தொற்று பரவாமல்  தடுக்கலாம். தனிமனித விலகலை கடைப்பிடிக்க ஏதுவாக  இருக்கும்* 

*மாவட்டம் விட்டு மாவட்டம் பணிசெய்யும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும், பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் பள்ளிக்கு வர இயலாத ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்*
➖➖➖➖➖➖➖➖

*எஸ். சங்கரப் பெருமாள்*
*மாநிலத் தலைவர்*
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம்*

➖➖➖➖➖➖➖➖

Post a Comment

Previous Post Next Post