💥💥💥💥💥💥💥
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், சிவராமன் தெரு சென்னை-5*
💥💥💥💥💥💥💥
_____________________________
*பள்ளிக் கல்வித்துறையானது ஒவ்வொரு ஆண்டும் அரசாணை வெளியிட்டு வெளிப்படையாக ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். தற்பொது கொரானோ பிரச்சனையின் காரணமாக பள்ளிகள் திறப்பு தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் பொது மாறுதல் இதுவரையில் நடத்தவில்லை ஆனால் நிர்வாக மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் நடத்தப் போவதாகத் தெரிகிறது . இதனால் இடைத்தரகர்கள் ஆசிரியர்களிடம் பணிமாறுதல் வாங்கித்தருவதாக கூறி கையூட்டு பெறுவதாக தெரிகிறது . இதனால் ஆசிரியர்கள் அரசு மீது நம்பிக்கை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், எனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.*
--------------------------------------------
*எஸ்.சங்கரப்பெருமாள்*
*மாநிலத் தலைவர்*
--------------------------------------------
Post a Comment